மகான் குருநானக்கிற்கு பதினேழு வயதான போது, அவரது தந்தையான கல்யாண்தாஸ், “வாழ்க்கைக்கு பணம் அவசியம். அதற்காக விவசாயம் அல்லது வியாபாரத்தில் ஈடுபட்டாக வேண்டும்’’ என்றார். “அப்பா... நான் விவசாயம், வியாபாரம் இரண்டும் செய்யப் போகிறேன். என் உள்ளமே வயல். அதில் தியானம் என்னும் விதை விதைத்து தெய்வீகம் என்னும் பயிரை விளையச் செய்வேன். என் உடல் என்னும் கடையின் மூலம் தெய்வீகம் என்னும் பொருளை விற்பனை செய்து பேரானந்தம் என்னும் லாபத்தை ஈட்டுவேன்” என பதிலளித்தார்.