ஏகாதசி விரதம், கூர்ம ஜெயந்தி.. பாவம் நீங்கி புண்ணியம் பெற பெருமாளை வழிபடுங்க!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2023 10:06
மற்ற விரதங்களுக்கு இல்லாத தனிச் சிறப்பு ஏகாதசிக்கு உண்டு. அசுரன் ஒருவனைக் கொல்வதற்காக பெருமாளின் உடலில் இருந்து ஒரு பெண் சக்தி தோன்றினாள். அவளை ஏகாதசிஎன்று அழைத்தனர். அவளுக்காகவே இறைவன் இந்த விரதத்தை ஏற்படுத்தியதாக பத்மபுராணம் குறிப்பிடுகிறது. விஷ்ணு, கூர்ம அவதாரமாக ஆமை வடிவிலும், அமிர்த கலசம் ஏந்தி நோய் தீர்க்கும் தன்வந்திரியாகவும், தேவர்களுக்கு அமிர்தம் வழங்கும் மோகினியாகவும் அவதாரம் எடுத்ததும் ஏகாதசி நன்னாளிலேயே ஆகும். வைகாசி வளர்பிறை வரும் மோகினி ஏகாதசி, அறியாமை, பாவத்தை அடியோடு போக்கக்கூடியது. திருமால் அவதரித்த தசாவதாரங்களில் 2-வது அவதாரம் கூர்ம அவதாரம். இன்று தாய், தந்தையை வணங்கி ஆசிபெறுவது மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும். ஏகாதசி, கூர்ம ஜெயந்தியான இன்று பெருமாளை வழிபடுவது சிறப்பு.