புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா 17ம் தேதி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2023 10:06
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனிதிருமஞ்சன தரிசன விழா வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன விழாவும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் கொண்டாடப்படுவது வழக்கம் இந்த ஆண்டு ஆனிதிருமஞ்சன தரிசன விழா வரும் 17 ம் தேதி காலை கொடியேற்றுத்துடன் துவங்க உள்ளது. தொடர்ந்து தினமும் சுவாமி வாகன வீதியுலா நடைபெறுகிறது அதில் 18 ம் தேதி வெள்ளி சந்திரபிரபை வாகன வீதியுலாவும், 19 ல் தங்க சூரியபிரபை வாகன வீதியுலாவும், 20 ம் தேதி வெள்ளி பூத வாகன வீதியுலாவும் நடைபெறுகிறது. தொடர்ந்து 21 ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடச்சானும், 22 ல் வெள்ளி யானை வாகன வீதியுலாவும், 23 ல் தங்க கைலாச வாகன வீதியுலாவும். 24 ம் தங்கத்தேரில் பிச்சாண்டவர் விதியுலாவும் நடைபெறும். முக்கிய விழாவான தேர் திருவிழா 25 ம் தேதியும், ஆனி திருமஞ்சன தரிசன விழா 26 ம் தேதியும் நடைபெற உள்ளது 27 ம் தேதி இரவு முத்துப்பல்லக்ககோடு T ஆனிதிருமஞ்சன தரிசன விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.