சதுரகிரி வைகாசி அமாவாசை வழிபாடு; நாளை முதல் 4 நாட்கள் அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2023 10:06
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு நாளை (ஜூன் 15) முதல் 18 வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிரதோஷ நாளான நாளை முதல் தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். வெயிலின் தாக்கம் தற்போதும் தொடர்வதால், எளிதில் தீப்பற்றும் பொருட்களை பக்தர்கள் கொண்டு வர வேண்டாம் என கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.