சூலத்தம்மன் கோவில் ஆண்டு விழா; மலர் அலங்காரத்தில் அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2023 10:06
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே தொப்பம்பட்டியில் சூலத்தம்மன் கோவில் ஆண்டு விழா நடந்தது. தொப்பம்பட்டி ராஜராஜேஸ்வரி நகரில் சூலத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின், 7ம் ஆண்டு விழாவை ஒட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சூலத்தம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.