பதிவு செய்த நாள்
19
ஜூன்
2023
04:06
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே ஜெங்கமநாயக்கன்பாளையத்தில் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழா இம்மாதம், 25ம் தேதி நடக்கிறது. விழாவை ஒட்டி இம்மாதம், 23ம் தேதி மங்கல இசை, அக்னி பிரதிஷ்டை, லட்சுமி நரசிம்ம ஹோமம், சௌபாக்ய மகாலட்சுமி ஹோமம், வாஸ்து ஹோமம் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு பகவத் பிரார்த்தனை, கலஷ பிரதிஷ்டை, பிரசாத விநியோகம் நடக்கிறது. 24ம் தேதி காலை, 8:00 மணிக்கு மங்கல இசை, சுப்ரபாதம், மகா சாந்தி ஹோமம் நடக்கிறது. அன்று மாலை கோபூஜை, விக்ரஹ வாஸ்து, பிரதான ஹோமம், மூலவருக்கு பால் அபிஷேகம், திருமஞ்சனம் நடக்கிறது. இம்மாதம், 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மங்கல இசை, சுப்ரபாதம், பிரதான ஹோமம், அதைத்தொடர்ந்து, காலை, 9:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம், அன்னதானம், மாலை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஜெங்கமநாயக்கன்பாளையம் கோயில் நிர்வாக திருப்பணி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.