பெண்களின் சபரிமலை என போற்றப்படுவது மண்டைக்காடு பகவதிகோயில். பெண்களின் உடல்நலம், மனநலம் காப்பதில் ஈடுஇணையற்றவளாக இங்குள்ள அம்பிகை விளங்குகிறாள். கேரளப்பெண்கள் 41நாட்கள் விரதமிருந்து இருமுடி கட்டிஇந்தக் கோயிலுக்குச் செல்வர். மனதில் எண்ணியது நிறைவேற அம்மனுக்கு வில்லுப்பாட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய காணிக்கை செலுத்துவர். லட்சுமி, சரஸ்வதி, ராதா, திரிபுரசுந்தரி, சாவித்திரி என்னும் ஐந்து அம்பிகையின் அம்சமாக பகவதியம்மன் அருள்பாலிக்கிறாள். நவக்கிரக தோஷம் போக்கும் நாயகியான பகவதியின் கோயில் நாகர்கோவிலில் இருந்து 36 கி.மீ, தொலைவில் உள்ளது.