பக்தரான துளசிதாசர் நோயில் வாடிய போது அனுமன் அருள் வேண்டி பாடிய ஸ்தோத்திரம் அனுமன் சாலீஸா. ஹிந்தியின் கிளை மொழியான அவதியில் எழுதப்பட்டது. இந்தியா முழுவதும் அனுமன் பக்தர்களால் பாராயணம் செய்யப்படுகிறது. தொடர்ந்து 48 நாள் படித்தால் விருப்பம் நிறைவேறும். தினமும் படித்தால் உடல்நலம், மனநலம் பெருகும். செவ்வாய், சனிக்கிழமைகளில் படிப்பது சிறப்பு. ‘சாலீஸா’ என்பது எண் ‘ 40 ’ ஐ குறிக்கும். அனுமனைப் போற்றும் 40 ஸ்லோகம் இதிலுள்ளன.