சிவபெருமான், பெருமாளை வழிபடுவதற்கு ஒரு விதி உள்ளது. காலையில் சூரியபகவான் உதிக்கிறார். மக்கள் துாக்கத்தில் இருந்து விடுபட்டு மலர்ச்சி அடைகிறார்கள். குளிர்ந்த வைகறை பொழுதான விடியற் காலையில் ‘ஹரிநாராயண ஹரிநாராயண’ என பெருமாளின் நாமத்தை சொல்வது சிறப்பு. இதுவே மாலையில் மக்கள் வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்புவர். பறவைகள் கூட்டுக்கு திரும்பும். இப்படி உலகம் ஒடுங்கத் தொடங்கும் வேளையில், ‘சிவ சிவ’ என ஞானமூர்த்தியான சிவபெருமானின் நாமத்தை சொல்வது சிறப்பு.