ஒரு சமயம் மக்காவில் பஞ்சம் நிலவியதால் மக்கள் வாடினர். நபிகள் நாயகத்தை ஒரு பரந்த வெளிக்கு அழைத்துச் சென்றார் அபூதாலிப். பின் மழை பெய்வதற்காகப் பிரார்த்தனை செய்யுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டார். அவரும் பிரார்த்தனை செய்யவே, மழை பொழிந்தது. அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணமே இதற்கு காரணம். இதுபோல் நல்ல எண்ணத்துடன் செய்யும் செயல் நிச்சயம் வெற்றி பெறும்.