இப்னு தைமிய்யா என்பவர் தனது வாழ்நாளை சிறையிலேயே கழித்தவர். ஒரு சிறையில் இருந்து மற்றொரு சிறைக்கு மாறுவது மட்டுமே அவருக்குக் கிடைத்த சுதந்திரம். இருந்தாலும் அமைதியாக இருந்தார். ஒருவர் இதற்கான காரணத்தை கேட்டார். அதற்கு அவர், ‘‘எதிரிகளால் என்னை என்ன செய்துவிட முடியும்? எனது சுவனமும், நிம்மதியும் என் உள்ளத்தில்தான் உள்ளது. என்னைச் சிறை வைத்தால் இறைவனுடன் தனித்திருக்கும் சந்தர்ப்பம் அமைகிறது. என்னைக் கொலை செய்தால் அது வீரமரணம். நாடு கடத்தினால் அது உல்லாசப் பயணம். என்னை இவர்களால் என்ன செய்ய முடியும்?