பதிவு செய்த நாள்
22
ஜூன்
2023
11:06
திருநெல்வேலி: பாளை., மேலக்குளம் ராஜஸ்ரீ அஷ்டபுஜ தவயோக வனவாராகி அம்மன் கோயிலில் ஆஷாட நவராத்திரி பூஜையின் மூன்றாம் நாளில்அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பாளை., மேலக்குளம் ராஜஸ்ரீ அஷ்டபுஜ தவயோக வனவராகி அம்மன் கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா கடந்த 19ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. தினமும் யாகசாலை பூஜைகள், அபிஷேக, அலங்கார, தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று ஐஸ்வர்யம், ஆரோக்கியம் பெற வேண்டி மகாலட்சுமி, சங்கரி, சுவப்னவாராஹி ஹோமம், பூஜை நடந்தது. பூஜைகளை ராஜாமணி சிவாச்சாரியார் தலைமையில் குழுவினர் நடத்தினர். இன்று (22ம் தேதி) காலை10.30 மணிக்கு பகைவர்கள் நீங்க, பயம் நீங்க, காரிய வெற்றி பெற வேண்டி ஜெயதுர்க்கா ஹோமம், லகு வாராஹி ஹோமம், மகா காளி, காளராத்திரி ஹோமம், பூஜை நடக்கிறது. 23ம் தேதி கல்வி, செல்வம், புத்ரபாக்கிய பெறவேண்டி காலை 10.30 மணிக்கு மகா சரஸ்வதி, பத்மாவதி ஹோமம், திரஸ்கரனி வாராகி, ராஜ மாதங்கி ஹோமம் மற்றும் பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை ராஜாமணி சிவாச்சாரியார் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.