சோழபுரம் அருள்மொழி நாதர் சுவாமி கோயிலில் பிரமோற்சவ கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூன் 2023 12:06
சிவகங்கை : சோழபுரம் அருள்மொழி நாதர் சுவாமி திருக்கோவில் பிரமோற்சவ விழா துவக்கமாக கொடியேற்ற வைபவம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் சோழபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி அம்மன் சமேத ஸ்ரீ அருள்மொழி நாதர் சுவாமி திருக்கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கொடியேற்ற வைபவம் நடைபெற்றது முன்னதாக உற்சவ தெய்வங்கள் விநாயகர் பெருமான் வள்ளி தெய்வானை உடன் முருகப்பெருமான் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் மற்றும் பிரியாவிடை அம்மன் அருள் மொழி நாதர் சுவாமி அறம் வளர்த்த நாயகி அம்மன் ஆகியோர் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார்கள் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கொடி மரத்தில் நந்தி உருவம் வரையப்பட்ட வஸ்திரத்தை கொண்டு கொடியேற்றப்பட்டது பின்னர் உதிரி பூக்கள் கொண்ட அர்ச்சனைகள் செய்து மகா கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன இதனைத் தொடர்ந்து உற்சவ தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்ற கோடி தீபம் நாகதீபம் காண்பித்து வில்வத்தால் அர்ச்சனைகள் செய்யப்பட்டன நிறைவாக பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்மனை வழிபட்டனர் இன்று முதல் பத்து நாட்களிலும் சுவாமி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திிருவீதி உலா வருகிறார் .