திரௌபதி சமேத தர்மராஜர் கோயில் பிரம்மோற்சவ விழா: முன்னேற்பாடு பணிகள் ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூன் 2023 06:06
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் துணைக் கோவிலான திரௌபதி சமேத தர்மராஜர் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை வெள்ளிக்கிழமை (23.6.2023) முதல் 11 நாட்கள் நடைபெற உள்ள நிலையில் பிரம்மோற்சவ ஏற்பாடுகளை ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு .தாரக சீனிவாசலு ஸ்ரீகாளஹஸ்தி ஆர்.டி.ஓ. ராமாராவுடன் இன்று முன்னேற்பாடு பணிகளை தர்மராஜர் கோயிலுக்கு சென்று ஆய்வு செய்தனர். திரௌபதி சமேத தர்மராஜர் திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளான வரும் 27 ஆம் தேதி திரௌபதி சமேத தர்மராஜர் திருக்கல்யாண உற்சவம் , 30-ம் தேதி அன்று அர்ஜுனர் தவசு தொடர்ந்து அடுத்த மாதம் ஜூலை இரண்டாம் தேதி அன்று (அக்னிகுன்ட பிரவேசம்) தீமிதி விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது . இந்நிலையில் கடந்த ஆண்டு தீமிதி (அக்னிகுண்டம்) தீ மிதிப்பதற்கு பக்தர்களுக்கு போதுமான இடம் இல்லாததால் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதனை கவனத்தில் கொண்டு ஸ்ரீகாளஹஸ்தி ஆர்டிஓ ராமாராவ் சிவன் கோயில் அறங்காவலர் குழுவினருக்கு தகுந்த அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கினர் ..கடந்த ஆண்டை விட ( தீ மிதிக்கும்) குண்டம் சற்று பெரிய அளவில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆலோசனை செய்யப்பட்டும், ஏராளமான பக்தர்கள் தீ மிதிப்பதற்கு சாதகமாக இருக்கும் வகையில் பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் அக்னி குண்டம் கடந்த ஆண்டை விட மேலும் (இடது-வலது)இரு புறமும் மேலும் 10 அடி அகலம் கூட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பக்தர்களுக்கு எந்த சீரகமும் ஏற்படாத வகையில் சாமி தரிசனம் செய்ய கோயிலுக்குள் செல்ல நீண்ட வரிசைகளை ஏற்பாடு செய்வதோடு வரிசையில் தள்ளுமுள்ளு ஏற்படாமல் (இரண்டு புறமும்) இரும்பு வேலி அமைக்க வேண்டும் என்றும் மேலும் திருவிழாவையொட்டி கோயிலில் மின் விளக்குகள் அலங்காரம் மற்றும் பல்வேறு பணிகள் குறித்து தகுந்த அறிவுரைகளை ஊழியர்களுக்கு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ காளஹஸ்தி தேவஸ்தான அதிகாரிகள் கோயில் அர்ச்சகர்கள் பூசாரிகள் மற்றும் நகர பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.