Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுர்த்தி விரதம்: சங்கடங்கள் யாவும் ... குமார சஷ்டி, சஷ்டி விரதம்: முருகனை வழிபட நல்லதே நடக்கும் குமார சஷ்டி, சஷ்டி விரதம்: முருகனை ...
முதல் பக்கம் » துளிகள்
பஞ்சமி திதி : வாராஹியை வழிபட கேட்ட வரம் கிடைக்கும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பஞ்சமி திதி : வாராஹியை வழிபட கேட்ட வரம் கிடைக்கும்!

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2023
01:06

பஞ்சமி திதி என்பது வாராஹியை வழிபடுவதற் கான மிக முக்கியமான நாள்.  சப்த மாதர்களில் அதீத வீரியமும் தீய சக்திகளை அழிப்பதில் வேகமும் துடிப்பும் கொண்டு ஓடோடி வருபவள் வாராஹி தேவி. சப்தமாதர்களில் வாராஹியின் 12 திருநாமங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை என்றும்,  இந்தத் திருநாமங்களை செவ்வாய், வெள்ளி மற்றும் வளர்பிறை பஞ்சமி காலங்களில், உச்சாடனம் செய்யச் செய்ய... சொல்லச் சொல்ல நம்மை அரண் போல் வந்து காத்தருள்வாள் வாராஹி தேவி என்கிறார்கள் சாக்த வழிபாடு செய்யும் அன்பர்கள். வாராஹி தேவியின் திருநாமங்கள்... 1. பஞ்சமீ 2. தண்டநாதேஸ்வரி 3. ஸங்கேதா 4. ஸமயேஸ்வரி 5. ஸமயஸங்கேதா 6. வாராஹி 7. போத்ரிணி 8. சிவா 9.வார்த்தாளி 10. மஹாசேனா 11. ஆக்ஞா சக்ரேஸ்வரி 12. அரிக்னி. ஸ்ரீ நவாவரண பூஜையில் வராஹி தேவியின் மேற்கண்ட பனிரெண்டு நாமாவளிகள் கொண்ட அர்ச்சனையை செய்ய வேண்டும். அப்போது செவ்வரளி முதலான செந்நிற மலர்களை அன்னைக்குச் சூட்டுவது கூடுதல் மகத்துவம் கொண்டது. பில்லி, சூனியம், கண் திருஷ்டி முதலான தீயசக்திகளை நெருங்கவிடாமல் விரட்டியடிப்பவள் என வாராஹி மாலா எனும் நூல் போற்றுகிறது.

வாராஹி - மனச் சஞ்சலங்கள், வீண் கலக்கம், சத்ரு பயம் ஆகியவற்றை விலக்கி, சந்தோஷ வாழ்வளிப்பாள். இந்த தேவி. பஞ்சமி திதி நாட்களில் வாராஹிதேவிக்கு மிக உகந்தவை. இந்த நாட்களில் கோயில்களில் சப்தமாதர்கள் சன்னிதியில் அருளும் வாராஹியை வழிபடுவது சிறப்பு. இன்று வீட்டில் வாராஹி அம்மனை வழிபட கேட்ட வரம் உடனே கிடைக்கும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 
temple news
* அறிவாளியாக இரு. உலகம் உன்னை மதிக்கும்.  * விதியை நம்பிக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. ... மேலும்
 
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 
temple news
* உடல், மனதை பாதுகாப்பதே உண்மையான விரதம். * விநாயகரை வணங்கு. நல்ல மனமும், லட்சுமியின் கடாட்சமும் ... மேலும்
 
temple news
* உதவி செய்ய பலர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம். * பெற்றோரின் சொத்தில் வாழாதே. உழைத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar