* உதவி செய்ய பலர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம். * பெற்றோரின் சொத்தில் வாழாதே. உழைத்து சாப்பிடு. * நம்பிக்கையுடன் முயற்சி செய். வெற்றி பெறுவாய். * எத்தனை தடை வந்தாலும் எடுத்த செயலை கைவிடாதே. அதை முடித்துக்காட்டு. * எதிர்பார்ப்பு இல்லாமல் பிறருக்கு உதவினால் நீயே உயர்ந்தவன். * எந்த ஏற்றத்துக்கும் ஒரு இறக்கம் உண்டு. எந்தத் துன்பத்துக்கும் ஒரு இறுதி உண்டு. * விருந்தினர் போல் இந்த உலகில் சிறிது காலமே தங்க வந்திருக்கிறாய். * பெண்களின் பங்களிப்பு இருந்தால் தான் குடும்பம் முன்னேறும். * அறிவைத் தேடிச் செல். செல்வம் தானாக வரும். * கஷ்டம் வரும் போது தான் உனக்கு பல உண்மைகள் தெரிய வரும். * கடவுள் எல்லா உயிர்களிலும் இருக்கிறார். * மனதில் ஆழ்ந்த சிந்தனை எழுந்து விட்டால், விரைவில் லட்சியத்தை அடைவாய். * அறிவு, செல்வம், தைரியம் மூன்றும் உனக்கு அவசியம். * எதையும் உடனுக்குடன் செய்தால் அந்தச் செயல் வெற்றி பெறும். * குழந்தைக்கு கல்வியுடன் விளையாட்டையும் சொல்லிக் கொடு.