பெண்ணுக்குறிய அழகு பற்றி எடுத்துரைக்கிறார் அவ்வையார்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2026 10:10
* உடல், மனதை பாதுகாப்பதே உண்மையான விரதம். * விநாயகரை வணங்கு. நல்ல மனமும், லட்சுமியின் கடாட்சமும் கிடைக்கும். * மனம் உற்சாகமாக செயல்பட அதிகாலையில் எழுந்திரு. * குடும்பத்தை காத்தல், தர்மநெறியுடன் வாழ்தல், உயிர்களை நேசித்தல் இவையே பெண்ணுக்கு அழகு. * ஒருவர் பலமுறை கூறிய பிறகு ஒரு செயலை முடிப்பது பண்பு ஆகாது. * பெரியோரிடம் வாதிடாதே. முடிந்த வரை அவர்கள் சொல்வதைக் கேள். * இனிமை தரும் நல்ல சொற்களை மட்டும் பேசு. * கைமாறு கருதாமல் பிறருக்கு உதவி செய். * நல்ல நுால்களைப் படி. உன் அறிவு வளரும். * இளமையில் வறுமை, முதுமையில் செல்வம் கிடைப்பது துன்பம் தான். * பல முறை ஆராய்ந்து முடிவு செய்த பிறகு செயலில் ஈடுபடு. * எல்லா உயிர்களையும் கடவுளாகப் போற்று. * பிறர் கூறுவதற்கு முன்பே உன் கடமையை செய்து விடு. * எந்த ஒரு செயலையும் அதற்குரிய காலத்தில் செய்து முடி. * பசியை விடக் கொடிய நோய் வேறில்லை. * அளவுக்கு அதிகமாக சாப்பிடாதே. * ஒரு பொருள் கிடைக்கவில்லை எனில் அதை உடனே மறந்து விடு. * ‘சிவாய நம’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை சொல். இதுவே விதியை வெல்லும் வழி.