கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூன் 2023 04:06
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் ஆனித்திருவிழா 10 தினங்கள் நடைபெறுகிறது. இன்று காலை 8:10 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது முன்னதாக சிவபெருமான் நந்தீஸ்வரர் உருவம் வரைந்த கொடி கோவில், தீர்த்தம் ஊரணியை சுற்றி வந்த பின் கொடிக்கு பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. இதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து சொர்ணமூர்த்தீஸ்வரர், பெரிய நாயகி அம்மன், விநாயகர் முருகன் சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவில் திருவிழாவிற்காக காப்பு கட்டுதல் நிகழ்வும் கேடக வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடந்தது. நிகழ்ச்சியில் சிவகங்கை தேவஸ்தான கண்காணிப்பாளர் உட்பட கிராமத்தினர் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமும் சுவாமி , அம்பாளுக்கு சிறப்பு பூஜை களை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு வாகனங்களில் வீதி உலா நடைபெறும். ஐந்தாம் நாள் திருக்கல்யாணம் ஒன்பதாம் நாள் ஜூலை 2 ந்தேதி சப்பரபவனி நடைபெறுகிறது. டி.எஸ்.பி.பார்த்திபன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் தேர் மற்றும் கோவிலை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.