* உழைப்பின் மூலம் பெறப்படும் பொருளே நிலைக்கும். அதுவே ஒருவருக்கு உயர்வைத் தரும். * அனைத்து உயிர்களிடத்திலும் உயர்வு, தாழ்வு கருதாதே. * எதிராளி பத்து வார்த்தை பேசினால் பதிலுக்கு ஒரு வார்த்தை பேசு. * உலகில் அன்பு என்ற மதமும், இதயத்தின் மொழியும் மட்டுமே உள்ளது. * கோபம், பொறாமை, ஆணவம் மிகவும் மோசமான நோய்கள். அவற்றில் இருந்து விலகியே இரு. * பணம் இல்லாமல் வாழ முடியாது. அதே சமயம் கஞ்சனாக இருக்காதே. * கடவுளிடம் சரணடைந்துவிடு. பிறகு அவரே உன்னை வழிநடத்த ஆரம்பிப்பார். * நல்லதோ, கெட்டதோ உனக்குரிய வினைப்பயனை நீ அனுபவித்தே ஆக வேண்டும். * கவலை, அவசரம், பயம், தயக்கம் போன்றவற்றால் அலைக்கழிக்கப்படாமல் இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். * போலி கவுரவத்தால் வாழ்வை வீணாக்காதே. * உனது வினைகளை கழிக்க ஒரு வழிதான் உள்ளது. அதைத் தைரியமாக அனுபவிப்பது. * மனதை அடக்குவது கடினம். ஆனால் அதன் தயவு இல்லாமலும் கடவுளை அறிய முடியாது. * இன்ப, துன்பம் மாறி மாறி வரும். ஆனால் யாருக்கும் நிலைத்திருப்பதில்லை. * நோய், வறுமையில் வாடுவோருக்கு உதவினால் கடவுளின் அன்பை பெறலாம். * உணவிலும், உடையிலும் எளிமையாக இரு.