சிலர் நன்றாக பேசுவர். ஆனால் அவர் பேச்சை கேட்ட பலரும் திடீர் என பேசுவது சரியில்லை என சலித்துக் கொண்டே மற்றவரிடம் குறை கூறி சென்று விடுவர். ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார் என ஆராய்ந்து பார்த்தால்... அதில் ஒரு உண்மை புலப்படும். அது என்ன தெரியுமா அது இது தான். விஷயம் தெரியாமல் தவறாகவும், ஆபாசமான சொற்களை பயன்படுத்தியும், அபசகுனமாகவும், கேட்பவர் மனம்புண்படியாகவும் பேசி இருப்பர். பேசும் போது இந்த மாதரியான பேச்சுகளை தவிர்த்தால் அப்பேச்சிற்கு மவுசு கூடும். அதைக் கேட்க ஒரு கூட்டமே காத்திருக்கும் என்பதை மறவாதீர்.