பணக்காரத்தந்தை தன் மகனின் மீது வழக்கு தொடர்ந்தார். மாதம் ஒரு முறை குறிப்பிட்ட தொகையை நேரில் வந்து கொடுக்க வேண்டும் என்பதே வழக்கின் சாரம்சம். வழக்கை விசாரித்த நீதிபதி மாதம் ஒரு முறை அல்ல... ஒவ்வொரு வாரமும் அவர்கேட்கும் தொகையை வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார் நீதிபதி. நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த அவரிடம் நீங்கள் பணக்காரர் தானே! பிறகு ஏன் இப்படி ஒரு வழக்கை உங்கள் மகன் மீது தொடுத்தீர்கள் அது பற்றி தெரிந்து கொள்ளலாமா எனக்கேட்டார். அதற்கு அவரோ ‘‘வேலை வேலை என தீவிரமாக அவன் இருக்கிறான். அவனின் முகம் பார்த்தே பல நாட்கள் ஆகி விட்டன. அவனை எப்படி இருக்கிறான் என்பதை தெரிந்து கொள்ளவே இப்படி ஒரு வழக்கினை தொடர்ந்தேன்’’ என்றார் அவர். அதைக் கேட்ட நீதிபதிக்கு தன் மகன்,மகளை பார்க்க வேண்டும் என்கிற ஆசையும் ஆர்வமும் தொற்றிக்கொண்டது.