தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனை நாடோடிக்கூட்டம் ஒன்று ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றது. அப்போது அவ்வூரில் இருக்கும் தேவாலயத்தில் ஒலித்த மணி ஓசை நன்றாக அவன் காதில் விழுந்தது. பெரியவனான அவனுக்கு பெற்றோரை பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. எந்த ஊரில் அவர்கள் வசிக்கிறாரகள் என்பதை தெரிந்து கொள்ள அவன் ஒவ்வொரு கோயிலாக சென்று மணியை அடித்துப் பார்த்தான். அவனுடைய சொந்த ஊரின் தேவாலய மணி ஓசை அவனது காதில் ஒலிக்க அதை வைத்து பெற்றோரை கண்டுபிடிக்க வசதியாக இருந்தது. ஆக எந்த செயல் நடைபெறும் போது கவனத்துடனும் விழிப்புணர்வுடன் இருங்கள். அது அத்தியாவாசமும் கூட.