தலையில் குட்டிக் கொண்டு, காதின் அடிப்பாகத்தை இழுத்துக் கொண்டு முழுமையாக உட்கார்ந்து விநாயகருக்கு தோப்புக் கரணம் இடுவதன் மூலம் நம் மூளையின் கண்ணறைகள் விழிப்படைகின்றன. அதனால் புத்திபலம், தேகபலம் உண்டாகிறது. இரண்டும் இருந்து விட்டால் எந்த தடை குறுக்கிட்டாலும் அதை முறியடிக்கும் வல்லமை வந்து விடும். இதற்காகவே வழிபாட்டில் தோப்புக்கரணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.