விழா ஒன்றில் பேச்சாளர் ஒருவர் ‘‘ பெரியோர்களே! தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கம்’’ என சொல்லி பேச்சைத் தொடங்கினார். இதைக்கேட்ட தலைவர் எனக்கு வணக்கம் சொல்லி தானே தொடங்கி இருக்க வேண்டும் என சபையில் கோபப்பட்டார். அதைக்கேட்டு சுதாரித்துக் கொண்ட பேச்சாளர் பெரியோர்கள் வரிசையில் தலைவரையும் சேர்த்தது தவறு தான் என்றார். அதைக்கேட்ட தலைவருக்கு சுளிர் என இருந்தது. மரியாதையை கேட்டு பெறாதீர்கள்.