திருவாசகம் பாடலில் இடம் பெற்ற தலங்கள் 43. இதில் ஏழு முக்கியமானவை * மாணிக்கவாசகர் அவதரித்த தலம் மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூர். * இவருக்காக நரிகளை பரிகளாக்கி அனுப்பியவர் மதுரை சொக்கநாதர். * புதுக்கோட்டை ஆவுடையார் கோயிலில் சிவபெருமானே குருவாக காட்சி அளித்தார். * ராமநாதபுரம் உத்தர கோசமங்கை மாணிக்கவாசகரின் முற்பிறவியோடு தொடர்புடையது. * செங்கல்பட்டு அருகிலுள்ள திருக்கழுக்குன்றம் சிவபெருமான் இரண்டாம் முறை குருநாதராக காட்சிஅளித்தார். * திருவண்ணாமலையில் தங்கிய காலத்தை திருவெம்பாவை பாடலை பாடினார். * சிதம்பரத்தில் இறுதிக்காலத்தை கழித்தார். பவுத்தர்களை வாதத்தில் வென்றார், பேசும் திறனற்ற இலங்கை இளவரசியை பேச வைத்தார்.