ஆடியில் வரும் 2 அமாவாசை: எதில் பிதுர் கடன் எனும் தர்ப்பணம் செய்ய வேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2023 12:06
இந்தாண்டு ஆடி மாத ஆரம்பம் இறுதி என இரண்டு அமாவாசை வருகிறது. அதில் எதை கடைபிடிப்பது என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இரண்டையுமே கடைபிடிக்கலாம் என, சாஸ்திர பண்டிதர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் அமையும் நாளே ஆடி அமாவாசை. சந்திரன் என்றால் தாய்; தாய் வழி உறவினர்கள். சூரியன் என்றால் தந்தை; தந்தை வழி உறவினர்கள். இவர்கள் இணையும் அமாவாசை நாளில் மறைந்த முன்னோர் அருள் புரிவர் என்பது ஐதீகம். தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசையன்று முன்னோருக்கு பிதுர் கடன் எனும் தர்ப்பணம் கொடுத்தால் அது அவர்களை நேரடியாக சென்றடையும் என்பதும் ஐதீகம். ந்தாண்டு ஆடி அமாவாசை ஆடி 1, ஆடி 31; அதாவது ஜூலை 17 ஆக., 16ல் வருகிறது. இதில் எதை கடைபிடிக்க வேண்டும் என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. இதுகுறித்து காஞ்சி சங்கர மடத்தை சேர்ந்த சாஸ்திர பண்டிதர் சுந்தரராம வாஜ்பாய் கூறியதாவது: இந்தாண்டு ஆடி மாதம் இரண்டு அமாவாசை வருகிறது. இதில் முதலில் வரும் ஆஷாட அமாவாசையை கடைபிடித்தால் விசேஷம். ஆடி இறுதியில் வரும் அமாவாசையையும் கடைபிடிக்கலாம். இரண்டு அமாவாசையையும் கடைபிடிப்பதும் நல்லது. இவ்வாறு, அவர் கூறினார். -நமது நிருபர்-