Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாகூர் மூலநாத சுவாமி கோயிலில் ... நொய்யல் பாதுகாப்பு விழிப்புணர்வு ரத யாத்திரை விழா நொய்யல் பாதுகாப்பு விழிப்புணர்வு ரத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் மங்கனி திருவிழாவை முன்னிட்டு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரைக்கால் மங்கனி திருவிழாவை முன்னிட்டு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2023
11:07

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு நேற்று பரமதத்தர் செட்டியார் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.

சிவபெருமானால் அம்மையே அன்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் 63 நாயன்மார்களின் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டு தோறும் மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது. இத்திருவிழா நேற்று மாலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.பரமதத்த செட்டியார் பட்டுவேட்டி,முத்து மாலைகளுடன் மாப்பிள்ளை அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு வாகனத்தில் ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு நேற்று இரவு அழைத்து வரப்பட்டார். முன்னதாக விநாயகர் கோவிலில் சிறப்பு தீபாரதனை நடத்தப்பட்டு பாரம்பரியப்படி மாப்பிள்ளையான பரமதத்தர் செட்டியாருக்கு திருஷ்டி கழிக்கப்பட்டது. பின் உபயதாரர்களான மாப்பிள்ளை வீட்டார் முன்செல்ல பரமத்தார் செட்டியார் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மாப்பிள்ளை கோலத்தில் முக்கிய வீதி வழியாக ஊர்வலம் நடந்தது. இன்று (1ம் தேதி) காலை புனிதவதியார் தீர்த்த குளத்தில் புனிதநீராடும் நிகழ்ச்சியும் காலை 7மணிக்கு மணமகன் பரமதத்தர் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளம் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 11 மணிக்கு காரைக்கால் அம்மையார் பரமதத்ருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மாலை பிஷாடண மூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடும்,இரவு திருமணம் முடிந்த காரைக்கால் அம்மையார் பரமதத்தர் முத்து பல்லக்கிள் வீதி உலா நடைபெறுகிறது. நாளை ம்தேதி அதிகாலை 3மணிக்கு பிஷாடணமூர்த்தி மற்றும் பஞ்ச மூர்த்திக்களுக்கு மகா அபிஷேகமும்காலை 7மணிக்கு பரமசிவன் அடியார் கோலத்துடன் பவழக்கால் விமானத்தில் பத்மாசனத்தமர்ந்து வேதபாராயணத்துடனும் வாத்தியங்கள் முழுங்க திருவீதியுலா நடைபெற்றும். அச்சமயம் பக்தர்கள் வீடுகளில் இருந்து மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சி மிகவிமர்ச்சியாக நடக்கிறது. இவ்விழாக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் அறங்காவலர் குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar