மக்காவிலுள்ள குறைஷி இனத்தவர்களுக்கு வியாபாரமே முக்கியத் தொழிலாக இருந்தது. ஒருநாள் அப்துல்லாஹ் இப்னு அபில் அம்ஸா என்னும் வியாபாரிக்கும், நபிகள் நாயகத்திற்கு பொருட்கள் கொடுக்கல், வாங்கல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அவரிடம் குறிப்பிட்ட நேரத்தில் வந்து பொருட்களை வாங்கிச் செல்கிறேன் என தெரிவித்தார் அப்துல்லாஹ். ஆனால் என்னவோ மறந்துவிட்டார். நேரம் கடந்து பதட்டத்துடன் அங்கே சென்றார். அப்போதும் நபிகள் நாயகம் அந்த இடத்திலேயே அவரை எதிர்பார்த்து இருப்பதை பார்த்தார். அவரிடம், ‘‘எவ்வளவு நேரமாக உங்களுக்காக காத்திருக்கிறேன். எனக்கு கஷ்டத்தை கொடுத்து விட்டீரே’’ என்று மட்டுமே சென்னார். இப்படி ஒரு வியாபாரிக்கு தேவையான நம்பிக்கையும், வாக்குறுதியும் இவரிடம் இருந்தன. இவருடைய மூதாதையரும் வியாபாரத்தை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.