இறைவன் எத்தனையோ அருட்கொடைகளை வழங்கியிருக்கலாம். ஆனால் அவற்றில் மிகவும் அரிதாகக் கிடைப்பது இரண்டு. அதில் ஒன்று திடநம்பிக்கை. மற்றொன்று பொறுமை. இவற்றை பெற்றவர்கள் பாக்கியசாலிகள். இவர்கள் தங்களுக்குத் தவறிப்போன இரவு வணக்கத்தைப் பற்றியோ, நோன்புகளைப் பற்றியோ கவலைப்பட வேண்டியதில்லை. எப்போதும் சூழ்நிலைகளை உணர்ந்து பொறுமையோடு செயலாற்றுவது மற்ற எல்லா விஷயங்களையும் விடச் சிறந்தது.