* வேததர்மத்தில் நம்பிக்கை வைத்தால், எல்லாம் நலமாக அமையும். * நல்ல மனிதன் உலகில் இருக்கும்வரை மழை பெய்துகொண்டிருக்கும். * எப்போதும் கடவுளை நினைப்பவர்களுக்கு குறைவு ஏதும் ஏற்படாது. * கோபம் என்ற தீயகுணத்தை கைவிடு. மனம் சமநிலையில் இருக்கும். * புலன்களின் கவர்ச்சியானது அறிஞர்களை கூட தடுமாறச் செய்யும். * நல்ல வழியில் பணத்தை தேடு. அதை நல்ல செயல்களுக்கு மட்டும் செலவிடு. * மற்றவர்கள் செய்யும் தவறுகளை மன்னிப்பவனே உயர்ந்த மனிதன். * பிறரது குறைகளை மறப்பவனே தெய்வமாகிறான். * புத்தியால் மனதை கட்டுப்படுத்து. வெற்றி இலக்கை எட்டுவது உறுதி. * தர்மம் எங்கு உள்ளதோ, அங்குதான் கடவுளும் இருப்பார். * வாழ்க்கை என்பது கடல் போன்றது. அதைக் கடக்க தர்மம் என்னும் ஓடத்தை பயன்படுத்து. * உயிருடன் இருக்கும் வரை உடன்பிறந்த குணங்கள் ஒருவரை விட்டு நீங்குவதில்லை. * உனது வாழ்வையே திசை திருப்பிவிடும் சக்தி பேராசைக்கு உண்டு. கவனமாக இரு. * நல்ல எண்ணமுடன் வாழ்ந்தால், அதுவே உன்னை நல்ல இடத்திற்கு அழைத்து செல்லும். * ஆசையற்றவருக்கு அறிவு சிறப்பாக வேலை செய்யும்.