அலெக்சாண்டரும் அவரது நண்பரும் பழமையான தேவாலயம் ஒன்றிற்கு சென்றனர். அங்கு வாசலில் கட்டப்பட்டு இருந்த கயிற்றின் முடிச்சுகளை யார் அவிழ்கிறார்களோ அவரே மாவீரர் என ஒரு வாசகம் ஓலையில் எழுதி அங்கு அதோடு தொங்கவிடப்பட்டு இருந்தது. அங்குள்ளவர்கள் அதுபற்றி கேட்ட போது பலரும் முயற்சித்தார்கள். அவர்களால் முடியவில்லை என சொன்னார்கள். முடிச்சுக்களை அவிழ்க்க முயன்றார் அலெக்சாண்டர். ஆனால் ஒரு முடிச்சினை அவிழ்த்தால் மற்றொரு இடத்தில் வேறு முடிச்சு விழுந்தது. நன்கு கவனித்த மன்னர் தன் உறை வாளை உருவி நடுவிலுள்ள முடிச்சினை வெட்டிவிட்டார். அவ்வளவு தான் அனைத்து முடிச்சுகளும் ஒரே நேரத்தில் அவிழ்ந்தன. எந்த செயலையும் செய்வதற்கு முன் அதை நன்கு ஆராய்ந்து செயல்படுங்கள் வெற்றி உங்களுக்கே.