எந்த வேலையை செய்தாலும் கவனம் தேவை. இல்லாவிடில் இழப்பு ஏற்படும் என பாடம் நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர். குறும்புக்கார மாணவன் புரியும்படி சொன்னால் நன்றாக இருக்கும் என்றான். உதவியாளரிடம் இரண்டு கண்ணாடி கோப்பைகளை எடுத்து வரச் சொன்னார். ஒன்றில் தண்ணீரும், மற்றொன்றில் வென்னீரும் ஊற்றி ஒவ்வொன்றாக பருகச் சொன்னார். முதலில் ஒரு கண்ணாடி கோப்பையை கையில் எடுத்த அவன் கவனமாக அது உடைந்து விடாமலும் தொண்டையில் சூடு ஏற்படாமலும் வென்னீரை குடித்தான். பிறகு குளிர்ச்சியான தண்ணீரை குடிக்க சொன்ன போது தயக்கமின்றி எடுத்து குடித்து விட்டு கீழே வைத்தான். அவன் வைத்த வேகத்தில் கோப்பையில் சிறு கீரல் ஏற்பட்டது. அவனிடம் இப்போது புரியும் என நினைக்கிறேன் என்றார் ஆசிரியர். வகுப்பறை மாணவர்கள் அனைவரும் அவனுடன் சேர்ந்து தலையசைத்தனர்.