அமர்நாத் புனித யாத்திரை: 5 நாட்களில் 67 ஆயிரம் பேர் பனி லிங்க தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூலை 2023 10:07
ஸ்ரீநகர்: கடந்த 5 நாட்களில் 67 ஆயிரம் பக்தர்கள் அமர்நாத் குகை கோயிலுக்கு வந்து தரிசனம் செய்துள்ளனர். அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்கள் உற்சாகத்துடன் வருகை தருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும், ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை கடந்த ஜூலை 1ம் தேதி துவங்கியது. வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி நிறைவடைகிறது. அமர்நாத் யாத்திரையில் கலந்துக் கொள்ளும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிஆர்பிஎப், ஜம்மு காஷ்மீர் போலீஸ், இந்திய ராணுவம் மற்றும் பிஎஸ்எப் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 5 நாட்களில் 67 ஆயிரம் பக்தர்கள் அமர்நாத் குகை கோயிலுக்கு வந்து தரிசனம் செய்துள்ளனர். இவர்களில் 12, 483 ஆண்கள், 5, 146 பெண்கள், 457 குழந்தைகள் உள்ளிட்டோர் அடங்குவர். பல யாத்திரிகர்கள் வரும் நாட்களில் புனித தலத்திற்கு அதிகம் வருவார்கள். மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் யாத்திரையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
உஷார்! பயங்கரவாத அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, ஜம்மு முதல் காஷ்மீர் வரையிலும், சர்வதேச எல்லையில் இருந்து கட்டுப்பாடு கோடு வரை பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் உள்ளனர்.