பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் பூச்செரிதல் விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2023 05:07
சிவகங்கை : சிவகங்கை பிள்ளை வயல் காளியம்மன் கோயில் பூச்செரிதல் கொடி மரத்துக்கு காப்பு கட்டப்பட்டு துவங்கியது.
சிவகங்கை பஸ் நிலையம் எதிரில் பிள்ளை வயல் காளியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு நடைபெறும் பூச்செரிதல் விழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பூச்செரிதல் விழாவை முன்னிட்டு சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.