திருப்பரங்குன்றம் கோயிலில் நாள் முழுவதும் பக்தர்களுக்கு பிரசாதம்: திட்டம் தயாரிக்கும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2023 05:07
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அரசு உத்தரவுப்படி நாள் முழுவதும் பக்தர்களுக்கு தினம் ஒரு பிரசாதம் வழங்குவதற்கான திட்டம் தயாரிக்கும் பணியில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் நாள் முழுவதும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. துணை கமிஷனர் சுரேஷ்: குன்றத்து கோயிலுக்குவரும் பக்தர்களுக்கு நாள்தோறும் சர்க்கரை பொங்கல், கல்கண்டு சாதம், வெண் பொங்கல், புளி சாதம், லெமன் சாதம், தயிர் சாதம் இவற்றில் தினம் ஒரு பிசாதம் வழங்குவது, தயாரிப்பதற்கான இடம் வசதி ஏற்படுத்துதல், சமையல் மற்றும் பிரசாதம் விநியோகிக்கும் பணியாளர்கள் நியமனம், அதற்கான செலவுகள் குறித்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அறிக்கை தயாரானவுடன் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.