துாத்துக்குடி: துாத்துக்குடி, டூவிபுரம் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயில் முனீஸ்வரர் கோயில் கொடை விழா நடந்தது.
முதலில் கடந்த 23ம்தேதி முனீஸ்வர ஸ்வாமிகளுக்கு கால் நாட்டு விழா நடந்தது. 30ம் தேதி கொடை விழா நடந்தது. 28ம்தேதி பத்திரகாளி அம்மனுக்கு கோயில் கொடை விழாவிற்கான கால்நாட்டு விழா நடந்தது. தொடர்ந்து கடந்த 4ம் தேதி கொடை விழாவும் நடந்தது. பத்து நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. கொடை விழாவினை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது. கொடை விழாவினை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி, மாவிளக்குகள் ஏந்தி பாரம்பரிய நையாண்டி மேளம், கோவை ஜமாப் மேளம், கேரளா செண்டை மேளத்துடன் ஊர்வலம் வந்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழுவினர், பக்தர்கள் செய்திருந்தனர்.