மறைந்த ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாருக்கு சிதம்பரம் நடராஜர் கோவிலில் மோட்ச தீபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2023 03:07
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் மறைந்த ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாருக்கு மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. கோவை சரக டிஐஜி நேற்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் எஸ்பி ஆக பணியாற்றியவர். மாவட்டத்தில் பணியாற்றியபோது பொதுமக்களிடம் நல்ல இணக்கமான உறவை ஏற்படுத்தி நற்பெயர் எடுத்து வந்தவர்: கடலூர் மாவட்ட மக்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணும் வகையில் பணியாற்றியதால் இவர் மீது இப்பகுதி மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் உண்டு. இந்நிலையில் விஜயகுமார் நேற்று தற்கொலை செய்து கொண்டு இறந்த செய்தி கடலூர் மாவட்ட அளவில் காவல்துறை மற்றும் பொதுமக்களை பெரிதும் மன வேதனைக்கு உள்ளாகியது. இந்நிலையில் நேற்று இரவு சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு வீதியில் விஜயகுமார் மறைவுக்கு மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.