பதிவு செய்த நாள்
08
ஜூலை
2023
06:07
காரியாபட்டி: காரியாபட்டி பாப்பனம் கிராமத்தில், பாப்பனம், நிலையூர், வத்திராயிருப்பு, வில்லூர், புதுக்கோட்டை, அவனியாபுரம், தென்கரை, சின்னமனக்குளம், பரவை உள்ளிட்ட ஊர்களில் வசிக்கும் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட ஆலடிக் கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை, யாத்ரா தானம், தெய்வத்திருக் குடங்கள் புறப்பாடு உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அபிஷேகம், தீபாராதனை நடந்தது. விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.