மெக்கா வெற்றிக்கு பின் காபாவை வலம் வந்தார் நபிகள் நாயகம். இவரைக் கொல்ல பின் தொடர்ந்து வந்தார் இஸ்லாத்தின் எதிரியான புளாலா. தனது ஆடைக்குள்ளே வாளை மறைத்து வைத்திருந்தார். புளாலாவின் நோக்கத்தைப் புரிந்து கொண்டவர் திரும்பி, “தீய எண்ணத்துடன் தானே என்னைப் பின் தொடர்கிறாய்” எனக் கேட்டார். அதற்கு “அப்படி ஒன்றும் இல்லை” என பதட்டப்பட்டார். பின்னர் நடந்தவற்றை குறித்து புளாலா கூறுகிறார்: நபிகள் நாயகம் கையை உயர்த்தியபோது, என்னை அடிக்கப்போகிறார் என நினைத்தேன். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவர் என் நெஞ்சின் மீது கை வைத்து, இறைவனிடம் மன்னிப்புக்கேள் என்றார். இந்த செயலிற்கு பின் என் மனம் மாறியது. பார்த்தீர்களா... கருங்கல்லையும் கசியச் செய்யும் ஓர் ஆயுதம் அன்பு. உலக வாழ்வு சிறது நாட்களே. ஆகவே அன்புடன் இருங்கள். நிம்மதி கிடைக்கும்.