வியாபாரத்தில் பொருட்களின் விலை என்பது சந்தை நிலவரத்திற்கு ஏற்றவாறு அமையும். வரத்து அதிகமானால் பொருட்களின் விலை குறையும். வரத்து குறைந்தால் விலை கூடும். ஆனால் சில வியாபாரிகள் பொருட்களை பதுக்குகின்றனர். இது தவறானது. இவர்களுக்காகவே சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. * பதுக்குபவர் பாவியாவார். * உணவுப்பொருட்களை பதுக்குபவர் தொழுநோயால் பாதிக்கப்படுவார். * பொருட்களின் விலையை அதிகரிப்பவர்கள், மறுமை நாளில் நரகத்தீயில் உட்கார வைக்கப்படுவர்.