மனிதர்களாக பிறந்த நாம் ஒழுக்கமாக வாழ்ந்தால் பல நன்மைகள் கிடைக்கும். அதிலும் உண்மை பேசுதல், பிறரை மதித்தல், உயிர்களிடத்தில் அன்பாக இருத்தல், பிறருக்கு உதவி செய்தல், பிறர் செய்த உதவியை மறக்காமல் இருத்தல் போன்ற பண்புகள் இருந்தால் இன்னும் சிறப்பு. இவை லட்சியங்களை அடைவதற்கு கைகொடுக்கும்.