எளிமையான வாழ்வே நிம்மதியை தரும். இப்படி வாழ்பவர்களை பார்த்து சிலர் ஏழை என்கிறார்கள். உண்மையில் எல்லா வசதிகள் இருந்தும் அதை அனுபவிக்காமல் இருப்பதே எளிமை. ஆனால் பலரும் ஆடம்பரத்தில்தான் கவுரவம் உள்ளது என நினைக்கிறார்கள். இவர்கள் பிறருக்காக வாழ்ந்து வீண் செலவையும் செய்கின்றனர். எனவே தேவையை குறையுங்கள்.