பதிவு செய்த நாள்
18
ஜூலை
2023
11:07
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஸ்ரீவேங்கடேஸ்வரர் வாரீர் கோவிலில், தங்கத் தேரோட்டம் நடந்தது.
மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் ஊராட்சியில் உள்ள, தென்திருப்பதியில் ஸ்ரீவேங்கடேஷ்வர வாரீர் கோவில் உள்ளது. ஆடி மாதம் தட்சிணாயன புண்ணிய காலம் துவங்கியதை அடுத்தும், ஆடி அமாவாசை திருவாடிப்பூரம் உற்சவம் விழா நடந்தது. காலை, 5:30 மணிக்கு சுப்ரபாதம், விஸ்வரூப தரிசனம், தோமாலை, சகஸ்ரநாம அர்ச்சனை, நிவேதனம், சாற்று முறை ஆகியவை நடந்தன. மாலையில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, தங்கத்தேருக்கு எழுதினார். பக்தர்கள் தங்கத் தேரை, வடம் பிடித்து கோவிலை சுற்றி இழுத்து வந்தனர். விழா ஏற்பாடுகளை கே.ஜி.டெனிம், ஸ்ரீ கண்ணபிரான் மில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். ஊழியர்கள், தொழிலாளர்கள், பக்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.