சென்னையின் முக்கிய பகுதியான பாரிமுனை தம்புச்செட்டி தெருவில் உள்ளது காளிகாம்பாள் கோயில். இந்த அம்பிகையை வியாசர், அகத்தியர், குபேரன் போன்றோர் வழிபட்டுள்ளனர். இக்கோயில் காஞ்சி காமாட்சி அம்மனுக்கு வடகிழக்கிலும், மயிலை கற்பகாம்பாளுக்கு வடக்கிலும், திருவொற்றியூர் வடிவுடையம்மனுக்கு தெற்கிலும், திருவேற்காடு கருமாரி அம்மனுக்கு கிழக்கிலும் வாஸ்து சாஸ்திரப்படி மையத்தில் அமையப் பெற்ற கோயிலாகும். ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்த அர்த்தமேரு சக்கரத்திற்கும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.