அம்பிகையின் மீது பாடப்பெற்ற நுால்களில் ஒன்று அபிராமி அந்தாதி. ஒரு மாலை போல காணப்படும் இந்நுாலில் உள்ள பாடல்களை தினமும் படித்து வருபவர்களுக்கு சகல செல்வங்களும் தானே எதிர் வந்து சேரும். இதன் பயனை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அனுபவிப்பவர் உணரலாம். ஒரே இரவில் பாடப்பெற்ற நுால் இது. குறிப்பாக விளக்கேற்றி பெண்கள் அபிராமி அந்தாதி பாடல்களை படித்து வந்தால் அவர்களுக்கு எந்த வித தீங்கும் அணுகாது. நல்லதே நடக்கும் என்கிறார் அபிராமி பட்டர். ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டமெல்லாம் பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவியடங்காக் காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும், கரும்பும்அங்கை சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கொரு தீங்கில்லையே