பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் முக்கிய நிகழ்ச்சியான அக்னிசட்டி வழிபாடு; நாளை நடக்கிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2023 06:07
பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனிப்பெருந்திருவிழாவில் முக்கிய திருவிழாவான நாளை ஆயிரக்கணக்கானோர் அக்னிசட்டி எடுத்து அம்மனை வழிபட உள்ளனர்.
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனி பெருந்திருவிழா ஜூலை 4ல் சாட்டுதலுடன் கம்பம் நடப்பட்டது. ஜூலை 10 முதல் கொடியேற்றத்துடன் 10 நாட்கள் திருவிழா நடந்து வருகிறது. நேற்று இரவு முதல் இன்று மதியம் வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர். தினமும் சிம்மம், யானை, குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா சென்று வருகிறார். நேற்று 9ம் நாள் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு, ஆயிரம் கண்பானை, முளைப்பாரி எடுத்து அம்மனை வழிபட்டனர். முக்கியத்திருவிழவான நாளை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து அம்மனை வழிபடுகின்றனர். டி.எஸ்.பி., கீதா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.