பிள்ளை காளியம்மன் கோயிலில் ஆடி வழிபாடு; நாட்டுக்கோழிகள் பலியிட்டு அசைவ அன்னதானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2023 10:07
கீழக்கரை: கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள பிள்ளை காளியம்மன் கோயிலில் ஆடி மாதம் வரக்கூடிய முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலை 10:00 மணி அளவில் முட்டையிடும் பருவத்தில் உள்ள 100 வெடக் கோழிகள் பலிபீடத்தின் முன்பு பலியிடப்பட்டது. பெரிய அண்டாக்களில் உணவு சமைக்கப்பட்டு பனை ஓலை பட்டையில் பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக மூலவர் பிள்ளை காளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். மகப்பேறு சுகப்பிரசவம் நடைபெற வேண்டி இங்குள்ள பிள்ளை காளியம்மனுக்கு நேர்த்திக்கடனாக கோழிகள் விடப்படுவது வழக்கம் அவற்றினை கொண்டு உணவு சமைக்கப்பட்டது. ஏற்பாடுகளை தட்டான் தோப்பு வழிகாட்டி பாலமுருகன் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.