பதிவு செய்த நாள்
19
ஜூலை
2023
01:07
சென்னை: காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வாரணாசியில் மேற்கொண்டு வரும் சாதுர்மாஸ்ய விரதத்தை முன்னிட்டு ஆக., 30ம் தேதி சிறப்பு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
சாதுர்மாஸ்ய விரதம் என்பது இல்லறவாசிகள், சன்னியாசிகளுக்கு என இரு வகைப்படுகிறது. ஆனி, துவாதசியில் இருந்து கார்த்திகை, துவாதசி வரை இல்லறவாசிகள் விரதம் இருப்பர். சன்னியாசிகள் ஆனி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமையில் துவங்கி, மஹாலய அமாவாசை முன் வரும் பவுர்ணமி வரையில் விரதம் இருப்பர். அந்த வகையில் காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த ஆண்டிற்கான சாதுர்மாஸ்ய விரதத்தை வாரணாசியில் மேற்கொண்டு வருகிறார். அதனை முன்னிட்டு சிறப்பு ஆன்மிக நிகழ்ச்சிகள், பூஜைகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, வாரணாசி, சிவாலயா, செட் சிங்போர்ட் பகுதியில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி மஹோற்சவம், 28ம் தேதி முதல் ஆக., 3ம் தேதி வரை நடக்கிறது. ஜெயந்திவிழா, பூர்ணாஹுதி, வேதசபா, அக்னிஹோத்ரா சபா ஆகிய நிகழ்ச்சிகள் ஆக.,5ம் தேதி முதல், 7ம் தேதி வரை நடத்தப்படுகிறது. பஞ்சாங்க சபா ஆக.,8ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடத்தப்படுகிறது. வேதிகா பிக்ஷாவந்தனம் ஆக.,13ம் தேதியும், விஷேச சாஸ்திரா சபா ஆக.,12ம் தேதி முதல், 14ம் தேதி வரையிலும், வேத லக்ஷன சபா, ஆக.,15ம் தேதி முதல், 17ம் தேதி வரையிலும் நடக்கிறது. ரிக்வேத சமஷ்ட ஹெவன், தக்ஷகிரான்ட பாராயணம் ஆக.,23ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கிறது. தினமும் மாலை கலை நிகழ்ச்சிகள், கர்நாடக, ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சிகள், பஜன்கள், கீர்த்தனைகள், ஹரிகதைகள் நடக்கிறது. இந்நிகழ்ச்சிகளை, www.kamakoti.tv, youtube.com/manchimath ஆகிய இணையதள முகவரி வாயிலாகவும் பார்க்கலாம்.