பதிவு செய்த நாள்
06
அக்
2012
10:10
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, மல்லியக்கரை கிராமத்தில், உலக நன்மை, மழை வேண்டி, 600க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.ஆத்தூர் அருகே, மல்லியக்கரை கிராமத்தில், உலக நன்மை, மழை வேண்டி திரவுபதி அம்மன் பிறப்பு வரலாறு குறித்த பாரத சொற்பொழிவு நடந்தது. நேற்று இரவு, 7 மணியளவில், அலங்கரிக்கப்பட்ட திரவுபதி அம்மனுடன், கோவில் பூசாரிகள், தீக் குண்டத்தில் இறங்கினர்.தொடர்ந்து, ஆத்தூர், மல்லியக்கரை, கீரிப்பட்டி பகுதிகளை சேர்ந்த, 650க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இத்திருவிழாவில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.