Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில் திருப்பணிக்கு அரசு நிதியுதவி உலக நன்மை, மழை வேண்டி பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுகவனேஸ்வரர் கோவில் யானை சுகவீனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2012
10:10

சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரி, திடீரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டு, சாப்பிட மறுத்து வருகிறது. கால்நடை டாக்டர்கள், யானையை பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்து வருகின்றனர்.சேலம், சுகவேனேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமாக ராஜேஸ்வரி, 37, யானை உள்ளது. பத்து ஆண்டுக்கு முன், யானையின் காலில் காயம் ஏற்பட்டது. தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.தமிழக அரசு, இரண்டு முறை நடத்திய முதுமலை யானைகள் முகாமுக்கு ராஜேஸ்வரி அழைத்துச் செல்ல முயற்சி மேற்கொண்டும், முடியவில்லை. இதனால், கோவில் வளாகத்தில், ராஜேஸ்வரி யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.நேற்று முன்தினம் இரவு முதல், திடீரென யானைக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டு, சாப்பிட மறுத்து வருகிறது. கோவில் நிர்வாகத்தினர், கால்நடை டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று மதியம், கால்நடை டாக்டர்கள், யானையை பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்து வருகின்றனர்.இந்நிலையில், கோவில் உதவி ஆணையர் பாஸ்கரன், ராஜேஸ்வரி யானை பராமரிப்பில் எவ்வித அக்கறையும் கொள்ளாமல், தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதால், இவ்வாறு அடிக்கடி யானை உடல் பாதிப்புக்கு உள்ளாவதாக, பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.சுகவனேஸ்வரர் கோவில் யானைக்கு, மருத்துவ குழுவின் ஆலோசனைப்படி, உணவு முறை, மாதம் ஒரு முறை சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.* ஃபோட்டோ எடுக்க தடை: யானை ராஜேஸ்வரிக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டதை அடுத்து, "காலைக்கதிர் ஃபோட்டோகிராபர், யானையை படம் பிடிக்க முயன்றார். அப்போது, கோவில் உதவி ஆணையர் பாஸ்கரன், ஆத்திரமடைந்து, கத்த ஆரம்பித்தார்.அவர், ஃபோட்டோகிராபரை பார்த்து, ""உங்களை எல்லாம் யாருய்யா உள்ளே விட்டா... வெளியே போயா... வெளியே போயா... என, காட்டு கத்தல் கத்தியவர், ""சின்ன விஷயத்தை பெரிசா ஆக்குறதே உங்களுக்கு வேலை. பத்திரிகைகாரங்களால தான் கோவிலே குட்டிச்சுவராகி விட்டது, என, கத்தியபடி சென்றார்.யானையை முறையாக பராமரிக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar